இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு இந்தியத் திருநாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் குறித்த ஆய்வு போன்றவற்றுக்காக பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் ஆர்ஐசாட் 2பிஆர்1 என்கிற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் செலுத்தப்பட்ட 50-வது பிஎஸ்எல்வி ராக்கெட் இந்தியத் திருநாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும், இதன்மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோ தலைவர் சிவன், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களின் முயற்சிகள் பாராட்டுக்குரியது எனவும், தாய்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திடத் தமிழ்நாடு மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version