வேலூர் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மக்களவை தொகுதிக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆயிரத்து 553 வாக்குச்சாவடி மையங்களில் 3 ஆயிரத்து 732 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2 ஆயிரத்து 99 வி.வி.பேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. இவை பலத்த பாதுகாப்புடன் ராணிப்பட்டை அருகேயுள்ள வாக்கு எண்ணிக்கை மையமான பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.
இதனையடுத்து வாக்குப்பெட்டக அறைக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் இந்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும்.