சென்னை கொட்டிவாக்கத்தில் சுகாதரமற்ற குடிநீர் தயாரிப்பதாக வந்த புகாரையடுத்து தனியார் நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்
கிழக்கு கடற்கரை சாலையில் தனியாருக்கு சொந்தமான குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. இங்கு தயாரிக்கப்பட்டு வரும் 20 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் கேன்கள் சுகாதாரமற்று இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர், இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சுகுமார் மற்றும் நடராஜன் ஆகியோர் அந்த ஆலையில் சோதனை நடத்தினர். நிலத்தடி நீரை உறிஞ்சி சுத்திகரித்து விற்பனை செய்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த ஆலையை மூடி சீல் வைத்தனர்.