தேனி அருகே அரசு அனுமதியின்றி செயல்பட்ட போலி உர நிறுவனத்திற்கு சீல்

தேனி அருகே அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த போலி உர நிறுவனத்திற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனிஷ் ஆண்டனி என்பவர் இயற்கை உரங்களை தயாரிப்பதாக கூறி, அனுமதியின்றி உர விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஆய்வு செய்த காவல்துறையினர், உரங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததால் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து தேனி தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் பிரசன்னா தலைமையிலான குழுவினர் அந்தப் பகுதியில் சோதனையிட்டனர். இயற்கை உரம் என்ற பெயரில் அரசு அனுமதியின்றி ரசாயன உரங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version