திருச்சியில் அனுமதியின்றி செயல்பட்ட மது மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தினை சுகாதாரத்துறை இணை இயக்குநர் பூட்டி சீல் வைத்தார்
திருச்சி கே.கே.நகரில் தனியாருக்கு சொந்தமான மது மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. இங்கு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் கடந்த வாரம் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் முன் அனுமதி பெறாமலும், தகுதி வாய்ந்த நபர்கள் பணியில் அமர்த்தப்படாமலும் மையம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மையத்திற்கு சீல் வைக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுக்கு சென்னை மனநல இயக்குனரகம் அறிவுறுத்தி இருந்தது. அதன்பேரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் சம்ஷாத் பேகம் மையத்திற்கு சீல் வைத்தார்.