குடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சருடன் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

குடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

சென்னை பசுமைவழிச்சாலையிலுள்ள இல்லத்தில், குடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபராக் , தேசிய துணை தலைவர் தெஹலான் பக்காவி ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசினர்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில், குடியுரிமை சட்டம் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணை தலைவர் தெஹலான் பக்காவி, குடியுரிமை சட்டம் குறித்து மத்திய அரசிடம் உரிய விளக்கம் கேட்டு தமிழக அரசு சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தங்ளிடம் கூறியதாக தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசை எதிர்த்து நாங்கள் போரட்டம் நடத்தவில்லை, மத்திய அரசை கண்டித்து மட்டுமே போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version