விவசாய நிலத்தில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள்

விழுப்புரம் மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் கி.பி 8-ம் நூற்றாண்டை சேர்ந்த மூத்த தேவி சிற்பம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் விவசாய நிலத்தில் பழங்கால சிற்பங்கள் கவனிப்பாரற்று இருந்து வந்தது. இதனை தொல்லியல் ஆர்வலர் செங்குட்டுவன் தலைமையிலான குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அவை கி.பி 7 அல்லது 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால தெவ்வை எனப்படும் மூத்த தேவி சிற்பங்கள் என கண்டறிந்துள்ளனர். மூத்த தேவி வழிபாடு தொன்மையான வழிபாடாக தமிழகத்தில் இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் நினைவுக் கற்கள் போன்றவையும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

Exit mobile version