சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் சின்னத்திரை நடிகர் ரகு மீது பள்ளி ஆசிரியை புகார் அளித்துள்ளார்.
சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவரிடம், 52 வயதாகும் சின்னத்திரை நடிகர் ரகு நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டதால், தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக ரகு கூறியதாகவும், இதனை நம்பி அவருடன் நெருங்கி பழகியதால் 4 முறை கர்ப்பமானதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததோடு, தனக்கு மனநிலை சரியில்லை என மருத்துவ சான்றை வாங்கி வைத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆயிரம் விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.