முதன் முறையாக மிகவும் சிறிய ஆக்டோபஸ்ஸினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 விஞ்ஞானிகள் முதன் முறையாக மிகவும் சிறிய ஆக்டோபஸ்ஸினை கண்டுபிடித்துள்ளனர்.ஹவாய் தீவிலேயே இச் சிறிய ஆக்டோபஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை Kaloko-Honokohau எனப்படும் தேசிய பூங்காவை சேர்ந்த விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர்.சாதாரணமாக ஆக்டோபஸ்கள் 2 மீட்டர்கள் நீளம் வரை வளரக்கூடியன. இவை பிறக்கும்போதே சில அங்குல அளவு நீளமானதாக இருக்கும். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறிய ஆக்டோபஸ் ஆனது பச்சை பட்டாணிக், கடலையின் அளவினை ஒத்ததாக காணப்படுகின்றது. பார்ப்பதற்கு சிறியதாக இருக்கக்கூடிய இந்த ஆக்டோபஸ்கள் அவ்வளவு எளிதில் பொதுமக்களின் கண்களில் படுவது இல்லை. 

Exit mobile version