பழனியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் பள்ளியில் மத்திய அரசு அறிவித்துள்ள விஞ்ஞான் மேளா என்ற திட்டத்தின் கீழ் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் விதமாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. காற்றாலை மின்சாரம், இயற்கை விவசாயம், மாடித்தோட்டம், போக்குவரத்து விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, டெங்கு கொசு ஒழிப்பு, காவல் நிலையம் உட்பட பல்வேறு வகையான படைப்புகளை மாணவர்கள் காட்சிபடுத்தி இருந்தனர்.