பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி

திண்டுக்கல்லில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ளதனியார் பொறியியல் கல்லூரியில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், கரூர், கோவை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் சைக்கிள், உளவு ரோபோட், கை அசைவுகள் மூலம் இயங்கும் லேப்டாப், கண் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்கிங் ஸ்டிக், தானியங்கி போக்குவரத்து மையம், ஆட்டோ ஸ்டீயரிங் உள்ளிட்ட படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. கண்காட்சியின் இறுதியில் சிறந்த படைப்புகளைப் படைத்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Exit mobile version