ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்-பள்ளிக்கல்வித்துறை

திட்டமிட்டப்படி ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் 3ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனிடையே ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்தநிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version