தென்கொரியாவில் வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் 5 மாதத்திற்கு பின் பள்ளிகள் திறப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து  வருவதால் தென் கொரியாவில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தென் கொரியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில், பிப்ரவரி மாதம் முதல் வைரஸின் தாக்கம் தீவிரமடைந்ததால் பள்ளிகள் திறப்பதற்கான தடை 5 முறை நீட்டிக்கப்பட்டது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின. முதற்கட்டமாக உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் தொடங்கபட உள்ளதாகவும், வரும் வாரங்களில் மற்ற வகுப்புகளும் தொடங்க உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அந்நாட்டின் கல்வியாண்டு மார்ச் மாதமே தொடங்க இருந்த நிலையில், வைரஸ் தாக்கத்தால் தாமதமானதை அடுத்து உயர்கல்விக்கான நுழைவு தேர்வுகள் டிசம்பர் மாதம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version