தமிழகத்தில், எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இல்லாமல் இயக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றி, இதுவரை அங்கீகாரம் பெறாத பள்ளிகள், உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அங்கீகாரம் இல்லாமல் எந்த பள்ளியும் செயல்படவில்லை என்பதை, அனைத்து கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாததுடன், அந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாகி விடும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அங்கீகாரம் இல்லாத பள்ளியில் பயில்பவர்கள், அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளை எழுத இயலாத நிலையும் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.