குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, பள்ளி மாணவர்களை பயன்படுத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திமுக
சிபிஐ,சிபிஎம், காங்கிரஸ் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட கட்சியினர் இதில் பங்கேற்றனர். இந்நிலையில் அரசு உதவி பெறும் புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 1000க்கும் மேற்பட்ட மாணவிகளை, பள்ளி சீருடையில் சின்னக்கடை பஜார் பகுதியில் இருந்து, பேருந்து நிலையம் வரை மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட வைத்தனர். இதனை எதிர்த்து இந்து முன்னணியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் கிருஷ்ணவேணி, பள்ளி நிர்வாகத்தை எச்சரித்ததுடன் , உடனடியாக பள்ளி மாணவிகளை மனிதசங்கிலி போராட்டத்தில் இருந்து விடுவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .