அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத முடியாது : தேர்வுத்துறை

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், வரும் ஆண்டு மேல்நிலை பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அவரவர்களின் மாவட்டங்களில் உள்ள அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு, அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், நடப்பு கல்வி ஆண்டில், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் இருந்தால், அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், 2020ம் ஆண்டு நடைபெறும் மேல்நிலைப் பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். அதோடு, இந்த ஆண்டு மேல்நிலை பொதுத் தேர்வு எழுத அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிகளின் பட்டியலை தேர்வுத்துறைக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version