பள்ளி மாணவ – மாணவிகளுக்கு குடை வாங்கிக் கொடுத்த ஆசிரியர்கள்

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில், பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் குடைகள் வாங்கி கொடுத்து இருப்பது பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட சற்று அதிகமாக பெய்தது. தற்போது வடகிழக்கு பருவமழையும் துவங்கியுள்ள நிலையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில் நனைவதால் மாணவர்களுக்கு காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன். இதனை கருத்தில் கொண்டு, நிலக்கோட்டை அருகே உள்ள அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, பள்ளியில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு குடைகளை வாங்கி கொடுத்துள்ளனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டியதோடு, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version