மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில், 7 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்க உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 164 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முதற்கட்டமாக நான்கு மேல்நிலை பள்ளிகளில் பயிலும் ஆயிரத்து 906 மாணவ-மாணவிகளுக்கு
64 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், இந்தியாவிலேயே கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாக, அதிமுக அரசு விளங்கி வருவதாகத் தெரிவித்தார்.

Exit mobile version