திருவேற்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களின் கை வண்ணத்திலும், எண்ணத்திலும் உருவான ஓவியங்களும், கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை திருவேற்காட்டில் உள்ள பீப்பிள் பசுமை பள்ளியில் சித்திர புனைவு ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஓவியக் கண்காட்சியை, ஓவியர் ரஞ்சித் மற்றும் எழுத்தாளர் அஸ்மா மேனன் துவக்கி வைத்தனர். மாணவ-மாணவியரின் எண்ணங்களில் உருவான 700-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கண்களுக்கும், சிந்தனைகளுக்கும் விருந்தளிக்கும் வகையில் ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
ஓவியங்கள் மூலம் பெறப்படும் தொகையில் 25 சதவிகிதம் ஓவியர்களுக்கும், 75 சதவிகிதம் முதியோர் இல்லத்திற்கும் அளிக்கப் போவதாக பள்ளியின் நிர்வாக இயக்குநர் சவீதா கூறினார்.