பள்ளி இடைவேளையில் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கீடு

தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் வகுப்பு இடைவெளியில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி துறை சார்பாக சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் உடல் ஆரோக்கியமாக வலுப்படுத்தும் வகையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் வகுப்பு இடைவெளியில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறிய அவர், இதுதொடர்பான அறிவிப்பு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும் என்று தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறையின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version