28 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக் கொண்ட பள்ளி நண்பர்கள்

பள்ளிப் பருவத்தில் பிரிந்து சென்ற நண்பர்கள் சமூக ஊடங்களின் உதவியுடன், 28 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

காரைக்கால் நேரு நகர் பகுதியில் சர்வைட் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயின்ற பாலமுரளி என்பவர், 4ம் வகுப்பில் தன்னுடன் படித்த மாணவர்கள், ஆசிரியர்களுடன் எடுத்த புகைப்படத்தை 5 மாதங்களுக்கு முன்பு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தன்னுடன் பயின்ற சக நண்பர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதையடுத்து, அனைவரும் தாங்கள் குடும்பத்துடன் சந்திக்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, தனியார் மண்டபம் ஒன்றில் 45 பேரும் ஒன்று கூடினர்.அரசு ஊழியர், தொழிலதிபர், அரசியல் பிரமுகர் என பல்வேறு நிலைகளில் உள்ள அவர்கள், தங்கள் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

Exit mobile version