மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜூலை 29ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு வரும் மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும், மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது, இணைய வழி வகுப்புகளுக்கான வருகைப் பதிவேடு அல்லது மதிப்பெண்களை தனித்தனியாக கணிக்கிடுவது கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்றும், வகுப்புகள் கட்டாயம் எனக் கூறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version