கொரோனா எதிரொலி – டெல்லியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

கொரோனா தாக்கம் காரணமாக டெல்லியிலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை மூட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் மட்டும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், தேர்வுகள் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மட்டும் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுகளை தவிர வகுப்புகளை நடத்த வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version