மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஜோதி மேல்நிலைப்பள்ளியில் ரிப்பன் சரியாக கட்டததால் ஆறாம் வகுப்பு மாணவியை வெயிலில் நிற்க வைத்துள்ள கொடுமை அரங்கேறியுள்ளது. வழக்கம்போல காலையில் பள்ளிக்குச் சென்ற மாணவி ரிப்பன் சரியாக அணியவில்லை என்று கூறி இரண்டு மணி நேரம் சுரீரென்று அடிக்கும் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். மாலை வீடு திரும்பிய சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததனை அறிந்த பெற்றோர்கள் நடந்தவற்றை விசாரித்துள்ளார்கள். பின் மாணவியை மருத்துவமனைக்கு அளித்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட ஆறாம் வகுப்பு மாணவிக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சை அளித்தப் பின்னரும் மாணவிக்கு தலைவலி குணமாகவில்லை. இந்தப் பிரச்சனையைப் பற்றி மாணவியின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளார்கள். ஆனால் பள்ளியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாணவியின் பெற்றோரை விரட்டி அடித்துள்ளனர். விரட்டியதோடு மட்டுமல்லாமல் எங்கள் பள்ளியின் விதிமுறையே இதுதான் என்று வம்பளந்துள்ளனர்.
இந்த ஜோதி மேல்நிலைப்பள்ளியினைப் பற்றி விசாரித்தபோது சம்பந்தப்பட்ட பள்ளியின் நிறுவனர்கள் திமுக விசுவாசிகள் என்று தெரியவந்துள்ளது. மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விசாரித்தபோது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியரின் சொல்பேச்சை மாணவர்கள் கேட்கவில்லை என்றால் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று வாய்மொழியாக தெரிவித்துள்ளார் என்று கூறினார். மாணவி ரிப்பன் அணியததால்தான் வெயிலில் நிற்க வைக்கப்பட்டார் என்று அலட்சியமாக பதிலும் அளித்திருக்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர். வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மாணவிக்கு ஏற்கனெவே இரத்தசோகை போன்ற உடல்நலப் பிரச்சனை இருப்பதால், இதுபோன்ற செயலில் ஈடுபடும் பள்ளி மாணவியின் உயிருக்கு உத்திரவாதம் தர முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த விடியாத திமுக அரசின் ஆட்சியில் தொடர்ந்து இதுபோல பள்ளி மாணவ மாணவிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.