இரசிகர் மன்ற தலைவராக செயல்படும் அன்பில் மகேஷ், கல்வி அமைச்சராக மெத்தனமாக செயல்படுவது ஏனோ?

ரசிகர் மன்ற தலைவராக சுறுசுறுப்பாகச் செயல்படும் அன்பில் மகேஷ், கல்வி அமைச்சராக, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மெத்தமனமாக செயல்பட்டு சொதப்பியது குறித்துச் சொல்கிறது.

ஒரு காரியத்த வேகமா செஞ்சு முடிக்கிறவங்கள பார்த்து… எள்ளுன்னா எண்ணெய்யா நிக்கிறாய்யா… என்று சொல்லுவார்கள்… அப்படித்தான் உதயநிதி ரசிகர் மன்ற தலைவரா சிறப்பா செயல்படுறாரு அன்பில் மகேஷ். வாரிசு அமைச்சரோட திரைப்படங்கள் சம்பந்தமான புரோமோஷன இணையத்துல பதிவேத்துறதுல தொடங்கி…. அந்தப் படத்துக்கு டிக்கெட் விக்குறது… கட்சிக்காரங்களுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து கூட்டம் சேக்குறதுன்னு, ஒவ்வொரு வேலையையும் களமிறங்கி பார்த்து பார்த்து செய்றதுல அன்பிலுக்கு நிகர் அன்பில் மட்டும்தான்!

ஆனா என்ன பண்றது… உதயநிதி ரசிகர் மன்ற தலைவரா இருக்குறவர… கல்வி அமைச்சராவும்ல ஆக்கியிருக்கு இந்த விடியா அரசு… ரசிகர்மன்ற தலைவரா எள்ளுன்னா எண்ணெய்யா நிக்குறவரு…. கல்வி அமைச்சரா வெளக்கண்ணையால இருக்காருங்கிறாங்க கல்வியாளருங்க…அரசு பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களோட வருகை எப்படி இருக்கு?

ஆசிரியர்களோட கற்பித்தல் திறன், மாணவர்களோட கற்கும் திறன் எப்படி இருக்குன்னு இந்த மாதிரி எதுலயுமே அக்கறை காட்டுறது இல்லையாம்… அதோட ரிசல்ட்தான், சமீபத்துல பொதுத்தேர்வு நடந்தப்போ பிளஸ் 2 மொழித்தேர்வ 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாதது… இந்த சங்கதி பரபரப்பானதும் பிளஸ் 1 தேர்வு பத்தாம் வகுப்பு தேர்வுல இந்தமாதிரி மாணவர்கள் எழுத வராம இருக்ககூடாதுன்னு பகீரதப் பிரயத்தனம் செஞ்சும் அதே மாதிரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வுக்கு வரல…. காரணம் தும்ப விட்டுட்டு வாலப் பிடிக்கிறமாதிரி கல்வி ஆண்டோட தொடக்கத்துலயே, மாணவர்களோட வருகையை கண்காணிக்காதது தான்!

அது சரி தேர்வு எழுதுறதுல தான் கோட்டை விட்டுட்டீங்க… பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடுறதுலயாவது ஆர்வம் காட்டுவாருன்னு பார்த்தா, அமைச்சர் அங்கேயும் கோட்ட விட்டுருக்காரு… மொதல்ல 5ஆம் தேதி ரிசல்ட் வெளியிடுவோம்னு சொன்னாங்க… அது மாறி 8ஆம் தேதியாச்சு… அப்பவே தேர்வு எழுதுன மாணவங்க சோர்வடைஞ்சிட்டாங்க… சரி 8ஆம் தேதி காலைல ஒன்பதரை மணிக்கெல்லாம் ரிசல்ட் வந்துடும்னு சொன்னாங்க!

ஆனா, ஒன்பதரையும் தாண்டி, 10 மணிக்கு மேல் தாண்டியும் ரிசல்ட் வெளியாகல… அமைச்சர் வந்துதான் ரிசல்ட்டை வெளியிடனும்னு அதிகாரிகள் சொல்லிட்டாங்க… இதனால் இணையதளத்திலும் மொபைல் போனிலும், தேர்வு முடிவப் பாக்க காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பதற்றமடைந்து, ரொம்பவே நொந்து போயிட்டாங்க…. சுமார் முக்கால் மணி நேரம் மாணவர்களும், பெற்றோர்களும் தவியாய் தவிக்க… ஆற அமர வந்து சேர்ந்த அமைச்சர் அன்பில் பொய்மொழி அதன்பின்பு சாவகாசமா ரிசல்ட்டை வெளியிட்டிருக்காரு

ஏற்கனவே மாணவர்கள் தேர்வு எழுதாம குழப்பம், ரிசல்ட் தேதி அறிவிப்புலயும் குழப்பம், இப்ப ரிசல்ட்ட வெளியிடுதுலயும் நேரக்குழப்பம்னு பள்ளிக்கல்வித்துறைய குழப்பத்துலேயே அமைச்சர் வச்சிருக்காரு… வாரிசு அமைச்சரோட ரசிகர் மன்ற தலைவரா காட்டுற அக்கறைய, பள்ளிக்கல்வித்துறை மேலேயும் மாணவர்கள் மேலேயும் காட்டுங்க பாஸு… இல்லாட்டி அமைச்சரவை மாத்தத்துக்கன வண்டியில நீங்களாவே வாண்டடா ஏறிக்குங்க!

Exit mobile version