பள்ளி கட்டிடம் என்றாலே வெள்ளை , மஞ்சள் ஆகிய வண்ணங்கள் தீட்டுவது தான் வழக்கம் ஆனால் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி கட்டிடத்தை train -ன் உருவத்தை போல் தத்துரூபமாக வடிவமைத்து வண்ணமிட்டுள்ளனர்.
இந்த பள்ளிக்கு education express என்று பெயரிடப்பட்டுள்ளனர். அங்கு உள்ள வகுப்பறை பயணிகள் அறையை போன்றும் தலைமை ஆசிரியர் அறை train இன்ஜின் அறை போன்றும் பள்ளி வராண்டா ரயில் நடைமேடை போல அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இப்பள்ளியை மாற்றியமைத்த பின்பு அப்பள்ளிக்கு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு தினமும் வர வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி வடிவமைத்தாகவும் இப்பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
இந்த பள்ளியின் புதிய முயற்சி அப்பகுதி மக்களை மகிழ்ச்சியிலும், ஆச்சிரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.