தொடர்மழையின் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ராசாமணி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேபோன்று கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் பழனிசாமி அறிவித்துள்ளார்.