மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ – மாணவிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரை, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக 2 லட்சம் ரூபாய் வரை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுக வேண்டும் எனவும் கோரப்படுள்ளது.