அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று செந்தில் பாலாஜிக்கு ஆதரவளிக்கும் திமுக, ஏற்கனவே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரே செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊழலின் ஊற்றுக்கண் என்று விமர்சனம் செய்துள்ளனர்.. அந்த விமர்சனங்களை சற்றே திரும்பிப்பார்க்கலாம்…2016 ஆம் ஆண்டு செந்தில்பாலாஜி செய்த ஊழல் குறித்து கருணாநிதி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வாங்கித் தருவதாக பலரிடம் வசூலித்த 4 கோடியே 25 லட்சத்தை அமைச்சரிடம் உதவியாளர் மூலமாகக் கொடுத்ததாகவும் ஆனால் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திரும்பித் தரவில்லை என்றும் கூறித்தான் வழக்கு என்று செந்தில் பாலாஜியின் ஊழலை அம்பலப்படுத்தினார்.
அதேபோல தேர்தல் பிரச்சாரத்தின்போது செந்தில் பாலாஜியின் சொந்த ஊரானா கரூரிலேயே ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் ஊழல் குறித்து பட்டியலிட்டதும் அவரை மிரட்டியதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியெல்லாம் செந்தில் பாலாஜி பற்றி வாய் கிழிய பேசிய ஸ்டாலின், திமுகவில் செந்தில்பாலாஜி ஐக்கியமாகிய பிறகு அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். பார் டெண்டர், கலால் வரி, போலி மதுபானம், கரூர் வசூல், பார் உரிமையாளர் மிரட்டல், 24 மணி நேர மது விற்பனையில் வந்த பல ஆயிரம் கோடி வருவாயை அப்படியே கரூர் கம்பெனிக்கும், திமுக தலைமைக்கு மாற்றி விட்டதும்தான் செந்தில் பாலாஜியின் சாதனையாக உள்ளது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுவில் சுமார் 50 சதவீதம் மது ஆயத்தீர்வை வரி செலுத்தப்படாமல் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே குற்றம் சாட்டியிருந்தார். மதுக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பிருந்தது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜியின் அனைத்து ஊழல்களுக்கும் ஸ்டாலின் துணை போவதோடு, ஊழலின் ஊற்றுக்கண் செந்தில் பாலாஜி என திமுகவினரே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
Discussion about this post