கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடை நீக்கம்

சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‘சாரதா’ என்ற நிதி நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று, திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த நிறுவனம், 4,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க, ராஜீவ் குமார் தலைமையில், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆனால் இவ்வழக்கின் ஆதாரங்களை ராஜீவ் குமார் அழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ்குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. மேலும், 7 நாளுக்கு கைது தொடர்பாக எந்த நடவடிக்கையும் சிபிஐ மேற்கொள்ளக்கூடாது. 7 நாளில் உரிய நீதிமன்றத்தை அணுகி ராஜீவ்குமார் ஜாமின் பெற்று கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version