ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆட்சேப மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
பிரான்சுடன் இந்தியா மேற்கொண்ட ரபேல் விமான ஒப்பந்தத்தை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தநிலையில், இந்த விசாரணையை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த மறுஆய்வுக்கு மத்திய அரசு தரப்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் ஆட்சேபம் குறித்து முதலில் முடிவெடுத்த பிறகு, மறுஆய்வு மனுக்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆட்சேப மனுமீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
Discussion about this post