கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கர்நாடகாவில் கொறடா உத்தரவை மீறியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். மேலும் வரும் 2023 ஆம் ஆண்டு வரை அவர்கள் தேர்தலில் போட்டியிடவும் சபாநாயகர் தடை விதித்தார். சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, 17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 17 பேரையும் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் 17 பேரும் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Exit mobile version