வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் உள்ள அனல்மின் நிலையத்தில், ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. அங்குள்ள சதுப்பு நில காடுகளில், நிலக்கரி சாம்பலை கொட்டி மாசு ஏற்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில், அனல்மின் நிலையத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. வல்லூரில் கடந்த ஐந்து நாட்களாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.