அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
அயோத்தி வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினமும் விசாரித்து வருகிறது. அடுத்த மாதம் 17ம் தேதி தலைமை நீதிபதி ஓய்வு பெற உள்ளதால் அதற்கு முன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இந்து அமைப்பான ராம் லாலா சார்பில் வக்கீல் பராசரன் வாதிட்டார். அப்போது, இந்துக்கள் ராமர் பிறந்த இடமாக நம்பப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தை மாற்ற முடியாது என்றார். வழக்கில், 39-வது நாள் விசாரணை முடிந்துள்ளதாகவும், இன்றுடன் விசாரணை நிறைவடையும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அயோத்தி வழக்கில் அடுத்த மாதம் 4 அல்லது 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.