காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து மனுதாக்கல்: வழக்கு ஒத்திவைப்பு

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 28 நாட்கள் அவகாசம் கொடுத்து மனுவை ஒத்திவைத்தது.

ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதை எதிர்த்து, தேசிய மாநாட்டு கட்சி சார்பிலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் அமைப்புகள் சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் 90-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று விசாரித்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து வரும் அக்டோபர் 30 ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Exit mobile version