50 சதவீத வாக்குபதிவு இயந்திரங்களை சரிபார்க்க கோரிய மனு தள்ளுபடி

50 சதவீத வாக்குசாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு வாக்குசாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை எதிர்த்தும், 50 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என்று கோரியும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 21 எதிர்கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version