அயோத்தி வழக்கின் தீர்ப்பைச் சீராய்வு செய்யக் கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி

அயோத்தி வழக்கின் தீர்ப்பைச் சீராய்வு செய்யக்கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அயோத்தியில் இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைச் சீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, நவம்பர் 9 ஆம் தேதி அளித்த தீர்ப்பே இறுதியானது எனக் கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

Exit mobile version