தென்மாநிலங்கள் தீபாவளியன்று காலை ஒருமணி நேரம், இரவு ஒருமணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்- உச்ச நீதிமன்றம்

 

 

 

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற தமிழக அரசு மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

மற்ற மாநிலங்களைப் போலவே இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்நிலையில், அதிகாலை 4 முதல் 5 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களுக்கு பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Exit mobile version