சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து – காவல்துறையினர் விசாரணை

சிவகாசி அருகே மீனம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டியில் சஞ்சய் பிரதீப் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் 10 அறைகளைக் கொண்டு செயல்படும் இந்த பாட்டாசு ஆலையில், தீபாவளி பண்டிகைக்காக 60க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அறையின் வெளியே உலர வைக்கப்பட்டிருந்த பட்டாசு, வெப்ப நிலை மாற்றத்தால் வெடித்ததில், விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக அனைவரும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். இந்த வெடிவிபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version