சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்களை ஆய்வு செய்ய புதிய அதிகாரி நியமனம்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராமச்சந்திரனை, புதிய அதிகாரியாக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சொந்தமான ஆபரணங்கள் பந்தள அரச குடும்பத்தின் பாதுகாப்பில் இருந்து வருகிறது. பந்தள அரச குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கோயிலை நிர்வகிப்பது மற்றும் ஆபரணங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ராமவர்ம ராஜா என்பவர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்கள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ராமச்சந்திரனை புதிய அதிகாரியாக நீதிபதிகள் நியமித்தனர். ஆபரணங்கள் குறித்து ஆய்வு செய்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version