சோனியா காந்தி, ராகுல்காந்தி மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2011-12 ஆம் நிதியாண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரின் வருமான வரிக் கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, சோனியா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவின்மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், சோனியா மற்றும் ராகுலின் வரவு-செலவு கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்தனர். எனினும், தற்போதைய வழக்கு விசாரணை முடியும்வரை, மறுமதிப்பீடு உத்தரவை அமல்படுத்த கூடாது எனவும் நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர்.