ஜனவரி ஒன்று முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க ஓடிபி கட்டாயம் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
ஏ.டி.எம். எந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’ என்ற கருவியைப் பொருத்திப் பணத்தைத் திருடும் நிகழ்வுகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்கும் வகையில் ஏ.டி.எம். எந்திரத்தில் அதிகப்பட்ச பணம் எடுக்கும் வரம்பை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக பாரத ஸ்டேட் வங்கி குறைத்தது. இந்த நிலையில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் முறையை பாரத ஸ்டேட் வங்கி, ஜனவரி 1 முதல் அறிமுகம் செய்கிறது. மேலும், இரவு 8 மணி முதல், காலை 8 மணி வரை இந்த முறை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்றுபவர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.