கஞ்சா எனக் கூறி ரஸ்னா பொடி விற்ற கும்பல்- வைரலாகும் புகைப்படம்

வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் அந்த மாநில காவல்துறையினரால் பதிவிட்ட ஒரு வித்தியாசமான ட்வீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு மேகாலயாவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஒருவழியாக கஞ்சா விற்பனை செய்த கும்பலை பிடித்த காவல்துறையினரே அவர்கள் விற்ற கஞ்சா பொடியை கண்டு அதிர்ந்தனர்.

காரணம்…அது கஞ்சாவே இல்லை..ரஸ்னா பவுடர். அதனை கஞ்சா என ஏமாற்றி அந்த கும்பல் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தியை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மேகாலய காவல்துறையினர், “ரஸ்னா பவுடரை கஞ்சா பொடி என விற்பதன் மூலம் ஷில்லாங் மார்க்கெட்டில் நிலவும் வறட்சியான நிலைமையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஒருவேளை உங்களைத் தேடி ரஸ்னா பொடி வந்தால் எங்கு புகார் அளிக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்” என காமெடியாக ட்வீட் செய்துள்ளனர். இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது.

Exit mobile version