கஷோகி படுகொலை வழக்கில் 11 அதிகாரிகள் குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

செய்தியாளர் கஷோகி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 அதிகாரிகளில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டது தொட்ர்பாக வழக்கில், 11 மீதான குற்றச்சாடு உறுதியாகியுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்து உள்ளது.

கஷோகி மயக்க மருந்து கொடுத்து கொல்லப்பட்டதாகவும், இந்த கொலைக்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஷோகியை கொலை செய்ய, சவூதி புலனாய்வு அமைப்பின் துணைத் தலைவர் அகமது அல்-அஸிரி தான் காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கஷோகி கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்குமாறு அரசு தரப்பு கோரியுள்ளதாக சவுதி அரசுக்கு சொந்தமான எஸ்பிஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version