சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை!

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்தும், சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பிற்பகல் 3 மணியளவில் காணொலி காட்சி வழியாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

 

Exit mobile version