தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் பார்வையாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் பார்வையாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். அப்போது தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் பார்வையாளர்களிடம் கேட்டறிகிறார். இதனை தொடர்ந்து, இன்று மாலை கொரோனா தடுப்பு முனெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தும் சத்யபிரதா சாகு, டாஸ்மாக் அதிகாரிகளுடனும் கலந்துரையாட உள்ளார்.