சத்யகோபாலுக்கு மீண்டும் பணி வழங்கியது தமிழக அரசு

தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக சத்யகோபால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற சத்யகோபாலுக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்ற நாளில் இருந்து ஓராண்டுக்கு சத்யகோபால் அந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version