சத்தியமங்கலத்தில் தொடர் மழையால் செழித்து வளர்ந்துள்ள நிலக்கடலை

சத்திய மங்கலம் அருகே தொடர்மழை காரணமாக செழித்து வளர்ந்த நிலக்கடலை பயிர்களின் ஊடாக வளர்ந்துள்ள களைகளை வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முன்பருவத்தில் பெய்யும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரியாக நிலக்கடலை பயிரிடுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை விதைப்பு செய்யப்பட்டது. செடிகள் நன்கு முளைத்து வளர்ந்த நிலையில் கடந்த ஒருவாரகாலமாக இப்பகுதிகளில் தொடர்மழை பெய்ததால் வாடிக்கிடந்த நிலக்கடலை செடிகள் தற்போது நன்கு வளர்ந்துள்ளன. மழை பெய்ததால் மண்ணின் ஈரப்பதத்தை பயன்படுத்தி களை வெட்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Exit mobile version