சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த வழக்கை, சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் விசாரணையில், உயிரிழந்த ஜெயராஜ் உடலில் 17 காயங்கள் இருந்தது என பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளதாக CBI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, பென்னிக்ஸ் உடலில் 13 காயங்கள் இருந்தது எனவும் உடலிலிருந்தது அதிக ரத்தம் வெளியேறியது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் 60 பேரை விசாரித்துள்ளதாகவும், சிபிஐ 35 பேரை விசாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜா ஆகிய காவல்துறையினரின் ஜாமீன் மனுக்கள் திரும்ப பெற பட்டதால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.