சசிகுமாரின் நெக்ஸ்ட் படத்தின் அப்டேட் இதோ!

சினிமா துறையில் தனக்கென தனி அடையாளத்தை வைத்து நடித்து வருபவர் சசிகுமார். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து நாடோடிகள்- 2, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.விரைவில் இந்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சசிகுமாரின் அடுத்த படமான ‘பரமகுரு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரை இன்று சசிகுமார் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தை ஜபக் தயாரிக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ரோனி ராஃபில் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் போஸ்டரை பார்க்கும் போது இது ஒரு த்ரில்லர் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இதில் சசிகுமார் வழக்கமான தோற்றத்தை விட இளமையாக தெரிகிறார்.சசிகுமாரின் படங்களிலே இது ஒரு வித்தியாசமான படமாக அமையும் என தகவல் வெளியாகவுள்ளது.

Exit mobile version